திருநீர்மலை தொண்டை நாட்டிலுள்ள 22 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்தலம் சென்னை பல்லாவரத்தில் இருந்து மிகக் குறைவான கிமீ தூரம் சென்றால் அடையலாம். இந்த திவ்யதேசம் "தோயகிரி க்ஷேத்திரம்" என்று குறிப்பிடப்படுகிறது. "தோயம்" என்றால் நீர், "அத்ரி" - மலை (கோவில்).; "தோயாத்ரி" என்றால் நீரால் சூழப்பட்ட மலை. மேலும் நீரால் சூழப்பட்டதால், “நீர்மலை" என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்தல பெருமாளை வழிபட திருமங்கை ஆழ்வார் ஒரு முறை வந்த பொழுது, கோயிலைச் சுற்றி தண்ணீர் இருந்ததால், ஆழவாரால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. அதனால் ஆழ்வார் 6 மாதங்கள் காத்திருந்து, தண்ணீர் வடிந்து அவர் கோவிலுக்குச் சென்றார். ஆழ்வார் தங்கியிருந்த இடம் "திருமங்கை ஆழ்வார் புரம்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்தலத்தின் புஷ்கரணி "க்ஷீர புஷ்கரிணி", "க்ஷீர" என்றால் "பால்"; எனவே இந்த புஷ்கரணி "திருப்பாற்கடல்" என்று கருதப்படுகிறது. இந்த புஷ்கரிணியில் காருண்ய புஷ்கரணி, சித்த புஷ்கரணி மற்றும் ஸ்வர்ண புஷ்கரிணி ஆகியவை உள்ளடங்கியுள்ளது.
க்ஷீராப்தி, ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள தெய்வீக நதியாகும். இந்த ஸ்தலத்தின் மூலவர் ஸ்ரீ ரங்கநாதர் சயன கோலத்தில் ஸ்ரீ வைகுண்டத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே காட்சி தருகிறார். எனவே இந்த புஷ்கரிணி திருப்பாற்கடல் தீர்த்தத்தைத் தவிர வேறில்லை என்பது தெளிவாகிறது.
பகவான் நரசிம்மர் தனது பக்தன் பிரஹலாதனின் பக்தியில் மகிழ்ந்து, அந்த பக்தியின் காரணமாக, தெய்வீகக் கண்ணீர் அவரிடமிருந்து வெளியேறியதாகவும், இது இந்த புஷ்கரணியில் "காருண்யா பத்மினி தீர்த்தம்" என்று விழுந்தது என்றும் கூறப்படுகிறது. "காருண்யம்" என்றால் தமிழில் "கருணை" என்று பொருள். இந்த ஸ்தலத்தில் பெருமாளின் 4 திருக்கோலங்களில் பகவான் நரசிம்ஹரும் ஒருவர்.
இந்த தீர்த்தத்தில் கங்கை நதி பாய்கிறது என்று நம்பப்படுகிறது; இதன் மூலம் "சித்த புஷ்கரணி" என்று பெயர் பெற்றது. நித்யசூரிகள் இந்த ஸ்தலத்தின் நீர்வண்ணனுக்கு திருமஞ்சனத்திற்காக (புனித நீராட்டம் ) வ்ரஜ நதியிலிருந்து தண்ணீர் சேகரித்ததாகவும், மீதமுள்ள தண்ணீர் இந்த புஷ்கரணியில் ஊற்றப்பட்டு, அதன் மூலம் "ஸ்வர்ண புஷ்கரிணி" என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
எனவே அடுத்த முறை இந்த கோவிலுக்கு செல்லும் போது மறக்காமல் சிறிது நேரம் இந்த புனிதமும் தெய்வீகமுமான புஷ்கரணிக்கு சென்று உள்ளம் உருக பகவானை நினைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.